வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Abimukatheesh
Last Modified: புதன், 11 மே 2016 (17:48 IST)

ஓட்டுப் போடாதிங்க என்று கிளம்பிய புதுக் கூட்டம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஓட்டுப் போடாதிங்க என்று ஒரு சில அமைப்புகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


 
 
தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவிதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், வாக்களிக்க பணம் வாங்க கூடாது என்றும் தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளில் ஈடுப்பட்டு வருவதோடு விழிப்புணர்வு விளம்பரங்களும் செய்து வருகின்றது.
 
இந்நிலையில் விவசாயிகள் முன்னிலை விடுதலை மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி ஆகிய அமைப்புகள் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டகளில் உள்ள கிராமங்களில் ஓட்டுப் போடாதிங்க என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இது தொடர்பாக அந்த அமைப்புகள் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். சுவரொட்டிகளில் தேர்தலால் தீர்வு காண முடியும் என்பது கானல் நீர் போன்றது, தேர்தல் தற்கொலைக்கு சமமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் தேர்தல் நாளன்று தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
 
இத்தகைய செயல் குறித்து தனியார் பத்திரிக்கை ஒன்றில் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த அமைப்பினர் கூறியதாவது:-
 
இந்த தேர்தல் முறை மக்களை ஏமாற்றும் செயல், ஒடுக்கும் செயல், தேர்தல்கள் தற்கொலைக்கு சமமானது.
 
விவசாயிகளுக்கு அதிகாரம் பெறுவதற்காகவும், மக்களின் பிரச்சனைக்காகவும் போராடி வருகிறோம், என்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்