49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த திமுக வேட்பாளர்

49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த திமுக வேட்பாளர்


K.N.Vadivel| Last Updated: வெள்ளி, 20 மே 2016 (12:05 IST)
ராதாபுரம் தொகுதியில்  49 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் அப்பாவு தோல்வி அடைந்தார்.
 
 
தமிழக சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அப்பாவு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
 
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில், அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கு அடுத்த வந்த அப்பாவு 69,541 வாக்குகள் மட்டுமே பெற்றார். வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு தோல்வி அடைந்தார்.
 
மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி அப்பாவு போராட்டம் நடத்தினார். மேலும், இந்த கோரிக்கை குறித்து தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 


இதில் மேலும் படிக்கவும் :