அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்: புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 164 இடங்களில் வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் தேர்தல் கருத்துக் கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு 7 நாட்களே உள்ள நிலையில் புதிய தலைமுறை மற்றும் ஏபிடி நிறுவனம் சேர்ந்து தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
தேர்தல் கருத்துக் கணிப்பில் அதிமுக 164 இடங்களில் வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், திமுக 66 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் பெறும் என்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் திமுக எதிர்க் கட்சியாகவும், மக்கள் நலக் கூட்டணி மூன்றாவது அணியாகவும் அமையும் என்பது கருத்துக் கணிப்பின் முடிவாகும்.
இதைத்தொடர்ந்து கருத்துக் கணிப்பில் மக்களிடம் “யாருக்கு ஓட்டுப் போட விருப்பம்” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது
அதிமுக - 38.5%
திமுக - 32.11%
மநகூ - 8055%,
பாமக - 4.7%
நாம் தமிழர் - 2.12%
பாஜக - 1.96%
கருத்துக் கணிப்பு என்பது தேர்தல் முடிவுக்கான முன் மாதிரியாக கருதப்படும் நிலையில் நீயூஸ் 7 வெளியிட்ட தகவலில் திமுக முன்னிலை வகிப்பதாக வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது புதிய தலைமுறை வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழக்த்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றுக் கட்சி அமைய வேண்டும் என்றுக் கூறிப் பிரச்சாரம் செய்யும் கட்சிகள் அனைத்தும் கருத்துக் கணிப்புகள் முறையாக எடுக்கப்படவில்லை என்று விவாதிப்பதுடன் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்