வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2017 (23:12 IST)

ஜல்லிக்கட்டு போராளி ஜூலியை பாத்திரம் கழுவ வைத்து கதற வைத்த பிக்பாஸ்

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி முதல் இரண்டு நாள் சற்று மந்தமாக போனாலும், இன்று ஓரளவுக்கு சூடுபிடித்துள்ளது. இன்று வெளியேறப்போகும் நபர் யார் என்பது குறித்து நாமினேஷன் நடந்தது.



 


இதில் நடிகர் ஸ்ரீ அதிக நெகட்டிவ் வாக்குகள் வாங்கியுள்ளதால் அவர் முதலில் வெளியேற வாய்ப்பு உள்ளது. மேலும் ஸ்ரீக்கு அடுத்தபடியாக அதிக நெகட்டிவ் வாங்கியவர் ஜல்லிக்கட்டு போராளி ஜூலி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமையல் செய்ய, பாத்திரம் கழுவ, வீட்டை சுத்தப்படுத்த என மூன்று தனித் தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. இதில் பாத்திரம் கழுவும் குழுவில் ஜூலி  தள்ளப்பட்டார். மேலும் அவர் பாத்திரம் கழுவும்போது கையில் காயம் ஏற்பட்டதால் அவர் கதறியதை பார்த்து அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு போராளியை பாத்திரம் கழுவ வைத்துவிட்டதே இந்த பிக்பாஸ் என்று நெட்டிசன்கள் புலம்புகின்றனர்.