1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (13:36 IST)

கன்னி: ஆவணி மாத ராசி பலன்கள்

(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) - பலன்: சங்கடங்களைக் களைய நினைக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள்  அகலும்.

எதையும்  ஒரு முறைக்கு பலமுறை  யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக  இருப்பது நல்லது. சொன்ன  சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.
 
தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலை பளு ஆகியவை இருக்கும்.  உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
 
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். ஆனாலும் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணிய பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு  தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்
 
பெண்களுக்கு எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
 
கலைத்துறையினர் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.  பயணங்கள்  செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
 
அரசியல்துறையினருக்கு காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின்  நட்பு  கிடைக்கும். கவனமாக செயல்படுவது நல்லது.
 
மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும்  கிடைக்கும்.,
 
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
 
இந்த மாதம்  எடுத்த காரியம் கைகூடும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.  உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு  மேம்படும்.  உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி  அதிகரிக்கும்.
 
அஸ்தம்:
 
இந்த மாதம்  குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.  தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.  தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த பொருளை வாங்கலாம். வருமானம் நன்றாக  இருப்பதால்  புதிய வீடு, வாகனம் வாங்க முற்படுவீர்கள்.
 
சித்திரை 1, 2, பாதங்கள்:
 
இந்த மாதம் யாரிடமும் கோபப் பட்டு பேச வேண்டாம். பிறர் சாதாரணமாக அறிவுரை கூறினால் கூட அது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கும். அத்தகைய குணத்தை விட்டொழியுங்கள். தியானம் செய்யுங்கள். மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.
 
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 21, 22; செப்டம்பர் 17.
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 10, 11.