செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

ரிஷபம்: மார்கழி மாத ராசி பலன்கள்

கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில்  சந்திரன்  -   ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில்   புதன் - அஷ்டம ஸ்தானத்தில்   சூர்யன், சுக்ரன்,  குரு, சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்:
 
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
07-Jan-20 அன்று மாலை 4:25 மணிக்கு  புதபகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-Jan-20 அன்று இரவு 8:22 மணிக்கு  சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
 
பலன்:
 
கவர்ச்சிகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால்  எதையும் எதிர் கொள்ளலாம். சிலருக்கு தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின்  செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். 
 
குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத்  திட்டங்கள் நிறைவேறும். இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும்  ஈடுபடுவீர்கள். உடல் உபாதைகள் மறைந்து ஆரோக்யம் காண்பீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும்.
 
தொழில் செய்பவர்களின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப்  பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த  பிறகே விரிவாக்கம் செய்யவும். 
 
உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள்.  சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும்  உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன்  பளிச்சிடும். 
 
அரசியல்துறையினரைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள்  உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும்.  சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். 
 
கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட  காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க  வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். 
 
பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்புவீர்கள். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து  கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். 
 
மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும்  வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு  விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.
 
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
 
இந்த மாதம் தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது  தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.
 
ரோகிணி:
 
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன்,  மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து  செல்வது நல்லது. 
 
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
 
இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.   சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
பரிகாரம்: பெருமாள் ஆலயத்தில் இருக்கும் ஆண்டாளை வழிபட மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். தொழில் மாற்றம் ஏற்படும். 
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 20, 21.