செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:22 IST)

மிதுனம்: ஆவணி மாத ராசி பலன்கள் 2022

Mithunam
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.


பலன்:
நிதானத்தை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல  தகவல்கள் வந்து சேரும். ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

தொழிலில் புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள்  தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக  பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும்.  வாகனத்தை  ஓட்டும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம்  எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை.

அரசியல்வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். முயற்சிகளில் எந்தவொரு தடையும் இல்லாமல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த தலைமைப் பதவிகளும் கிடைக்கும். புகழின் உச்சிக்கே செல்வீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். மக்களின் ஆதரவு பெருகும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். உங்களை வேண்டாம் என புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலில் முதலிடம் வகிக்கும். போட்டி பொறாமைகள் விலகும். தடைப்பட்ட பணவரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.

மாணவர்களுக்கு: பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம்.

திருவாதிரை:
இந்த மாதம் உங்கள் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.

புனர்பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

பரிகாரம்: புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும்.
சந்திராஷ்டம தினங்கள்: செப் 07, 08
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 29, 30, 31.