வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : சனி, 16 ஜூலை 2022 (14:45 IST)

மேஷம்: ஆடி மாத ராசி பலன்கள் 2022

Mesham
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் செவ்வாய், ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகநிலை உள்ளது.


பலன்:
எல்லோரையும் வசீகரிக்கும் இயல்பும், இனிமையான பேச்சும் கொண்ட மேஷராசியினரே, இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.  உடல் ஆரோக்கியம் பெறும்.  மனதில் தைரியம் கூடும்.  சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக் கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங் கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய  சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.

பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு  கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பரிகாரம்: சுவாமிமலை முருகனை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும்.

அசுபதி:
இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

பரணி:
இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

கார்த்திகை:
இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

பரிகாரம்: கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்:  ஜூலை 28, 29, 30.