திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (17:12 IST)

கும்பம்: ஆவணி மாத ராசி பலன்கள் 2022

Kumbam
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை உள்ளது.


பலன்:
உண்மையினாலும் உழைப்பினாலும் வாழ்வில் வெற்றி பெறும் கும்ப ராசிக்காரர்களே, இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். பயணங்கள் ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்  நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு: புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல்துறையினருக்கு உங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கௌரவமிக்க பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். நீங்கள் நடித்து வெளிவந்த படங்களும் வெற்றியடைவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும்.

மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அவிட்டம்:
இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

ஸதயம்:
இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

பூரட்டாதி:
இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தி தேவரையும், சிவனையும் வணங்கி சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 29, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 20, 21; செப் 16, 17.