திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2020 (16:29 IST)

மகரம்: மாசி மாத ராசி பலன்கள்

(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்) - கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்:
 
13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார். 
01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்கள்:
 
மனம் மகிழும் படியான நிகழ்ச்சிகளை சந்திக்க காத்திருக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு கோடி நன்மைகளைச் செய்யும் வகையில் இருக்கிறது. பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகளை ஏற்படுத்தி தருவார். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். 
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
 
குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.
 
பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
 
கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு நலல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும்.
 
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது.  மனதில் உற்சாகம் உண்டாகும்.
 
உத்திராடம் 2,3, 4 பாதங்கள்:
 
இந்த மாதம்  குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம்.
 
திருவோணம்:
 
இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.  சுபகாரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவீர்கள்.
 
அவிட்டம் 1, 2 பாதங்கள்:
 
இந்த மாதம்  மன நிம்மதி உண்டாகும். சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி 
பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 8, 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச் 2, 3.