1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 25 மார்ச் 2016 (20:23 IST)

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ’பீலே’ திரைப்பட ட்ரெய்லர்

பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட வீரர் ’பீலே’ அவர்களை பற்றியான வாழ்க்கை வரலாற்றை பீலே என்ற பெயரிலேயே திரைப்படமாக எடுத்துள்ளனர். அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 

 
பிரேசிலுக்கு மூன்று உலகக் கோப்பைகளைப் பெற்றுத் தந்த வீரர் பீலே. உலகின் தலைசிறந்த வீரர் பீலேவா அல்லது அர்ஜெண்டினா வீரர் டீகோ மாரடோனாவா என்று பெரும் விவாதமே இன்றைக்கும் நடந்து வருகிறது.
 
பீலே பிரேசில் தேசிய அணிக்காக 77 கோல்களையும், சாண்டோஸ் அணிக்காக 619 கோல்களையும், நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக 31 கோல்களையும் அடித்துள்ளார். மொத்தமாக பீலே 1283 கோல்கள் அடித்துள்ளார்.
 
இவரது சொந்த வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘பீலே: மேதையின் பிறப்பு’ என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது சிறப்பம்சமாகும். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
 
ட்ரெய்லர் இங்கே: