1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (10:46 IST)

லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் கணக்கு ஹேக்! – ஆபாச வீடியோக்கள் பகிர்வதால் அதிர்ச்சி!

பிரபல தமிழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் கணக்கு மர்ம நபர்களால் ஹைக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ் சினிமாவில் கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். தற்போது ஜீ ஸ்குவாட் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் ஃபைட் கிளப் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார்.

தனது படங்கள் குறித்த அறிவிப்புகள், இதர அப்டேட்களை பகிர லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவரது ஃபேஸ்புக் கணக்கு அவரது பெயரில் இருந்து வைரல் யோகா என்ற பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அதில் யோகா வீடியோக்கள் போன்ற சில ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. இதனால் லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக் பக்கத்தை ஃபோலோ செய்பவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்த வீடியோக்களின் கமெண்டுகளில் லோகேஷ் ரசிகர்கள் இந்த கணக்கு நிச்சயமாக ஹாக் செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் இவ்வாறான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்து லோகேஷ் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்போம் என கூறி வருகின்றனர்.

Edit by Prasanth.K