வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (13:03 IST)

ரசிகரின் புகைப்பழக்கத்தை விடவைக்க யுவன் செய்த செயல்!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உலக புகையிலை எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு ஒரு விழிப்புணர்வு பதிவை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

உலக புகையிலை எதிர்ப்பு நாளை முன்னிட்டு புகைப்பிடிப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் விஷத்தை ஏற்றிக் கொள்கிறீர்கள் எனக் கூறி புகைப்பழக்கத்தை கைவிடும் படி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த பதிவில் ரசிகர்கள் பலரும் பலவிதமான கமெண்ட்களை பதிவு செய்திருந்தனர். அதில் ஒருவர் மட்டும் ‘நீங்கள் எனக்கு ஹாய் சொன்னால் நான் புகைப்பிடிப்பதை விடுகிறேன்’ எனக் கூறியிருந்தார். அதையடுத்து யுவன் அவருக்கு ‘ஹாய்’ என ரிப்ளை செய்தார். அந்த ரசிகரும் ‘நான் அந்த பழக்கத்தை விடுகிறேன்’ என உறுதி அளித்துள்ளார்.