1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 மே 2022 (08:45 IST)

யோகி பாபு & மஞ்சு வாரியர் நடிக்கும் புதிய படம்… வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மஞ்சு வாரியர், யோகி பாபு மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும்  புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அறியப்படும் சந்தோஷ் சிவன், சீரான இடைவெளியில் படங்களை இயக்கியும் வருகிறார். தற்போது இந்தியில் மும்பைகார் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள செண்ட்டிமீட்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


இந்த படத்தில் மஞ்சு வாரியர், யோகி பாபு மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த போஸ்டர் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.