அந்தகன் டப்பிங் பணிகளை முடித்த யோகி பாபு!
நடிகர் யோகி பாபு அந்தகன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் தயாரிப்பில் உருவாகிவரும் அந்தகன் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததே. இடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த அந்தகன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து இப்போது படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் வெளிநாட்டு படப்பிடிப்பு மட்டும் சில நாட்கள் நடக்க வேண்டியுள்ளது. அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நடிகர் பிரசாந்த் அறிவித்துள்ளார். அந்தாதூன் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கே எஸ் ரவிக்குமார், கார்த்திக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்போது டப்பிங் பணிகள் நடந்து வரும் நிலையில் நடிகர் யோகி பாபு தன் காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார். இதை இயக்குனரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.