1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (09:46 IST)

விபத்துக்கு பின் முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த்!

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை மாதம் ஒரு விபத்தில் சிக்கி 3 மாதங்களாக மருத்துவமனை சிகிச்சையில் இருந்துவந்தார்.

நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் அவருக்கு கால் எலும்பு, இடுப்பு இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிவு அடைந்ததாகவும் அவருக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளும் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் அவர் எழுந்து நடமாடுவதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் வரை ஆகும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது. மேலும் இந்த விபத்தில் அவருடைய நெருங்கிய தோழி பவானி என்பவர் பலியானது அவருக்கு மனதளவில் மிகப்பெரிய சோகத்தை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சிகிச்சையில் முழுவதும் குணமாகிவிட்ட அவர் முதல் முறையாக ஒரு கடைதிறப்பு விழாவில் கலந்துகொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.