திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2023 (07:52 IST)

இணைய தொடராகும் யுவபுரஸ்கார் விருது பெற்ற ‘திருகார்த்தியல்’ சிறுகதை தொகுப்பு!

எழுத்தாளர் ராம்தங்கம் எழுதிய சிறுகதை தொகுப்பு ‘திருகார்த்தியல்’ தமிழ் வாசக உலகில் கவனம் பெற்ற படைப்பாக அமைந்தது. இந்த புத்தகத்துக்கு சமீபத்தில் சாஹித்ய அகாடெமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து எழுத்தாளர் ராம் தங்கத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சசி இப்போது இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து கதைகளையும் இணையத்தொடராக இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் சிறுவர்கள் உலகத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை. பசியால் வாடும் குழந்தை தொழிலாளர்களின் கதைகளை இந்த தொகுப்பில் பதிவு செய்திருப்பார் ராம்தங்கம்.