இருபது லட்சம் இல்லாம இந்தப் பக்கம் வராதீங்க...
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்த ஸ்ரீ யை நினைவிருக்கிறதா? இப்படி கேள்வி கேட்டுதான் அவரை அடையாளம் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த இளம் நடிகனுக்கு பெரிதாக படங்களும் இல்லை. ஆனால், சம்பள விஷயத்தில் மட்டும் பெரிதினும் பெரிது கேள் என்ற கூற்றுப்படி நடந்து கொள்கிறார்.
அதாகப்பட்டது, யார் ஸ்ரீ வீட்டு கதவைத் தட்டி கால்ஷீட் கேட்டாலும், அது எத்தனை சின்ன வேடமாக இருந்தாலும், நாலு படம் நடிச்சிருக்கேன்... இருபது லட்சத்துக்கு சம்பளம் குறையாது என்று கறார் காட்டுகிறார்.
நாலு படத்தில் ஷோலோ ஹீரோவாக நடித்தவர்களே சிங்கிள் டிஜிட்டில் சம்பளம் வாங்குகிற நிலையில், வளரிளம் பருவ ஸ்ரீக்கு இந்த கெத்து தேவையா...? நாங்க கேட்கலைங்க, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் கேட்கிறாங்க.