எழுந்திருக்க முடியாத நிலையில் அஜித் சொன்னதை கேட்டு அதிர்ச்சியான இயக்குனர்!

Sasikala| Last Updated: ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (14:58 IST)
சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம். படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது. கடும்குளிரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

 
அஜித் நடிப்பில் விவேகம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது. இப்படம் தொடங்குவதற்கு முன் அஜித் காலில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் படப்பிடிப்பே தாமதமாக தொடங்கியது.
 
இந்நிலையில் இந்த படத்திற்கும் அமர்க்களம் படத்திற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் அமர்க்களம் படத்திற்கு முன்பு அஜித்திற்கு பெரிய விபத்து ஏற்பட்டு, அப்போது அவரால் எழுந்து கூட உட்கார முடியாது நிலை. தலையை மட்டுமே ஆட்ட முடியும், அப்படி ஒரு கண்டிஷன்.
 
அந்த நேரத்தில் இயக்குனர் சரண் அவரை பார்க்க வர, ‘சார் அடுத்து நம்ம செம்ம ஆக்‌ஷன் படம் பண்றோம்’ என கூறினாராம் அஹித். அப்படி உருவானதுதான் அமர்க்களம் படம். இதேபோல் தான் விவேகமும்,பெரிய அறுவை சிகிச்சைக்கு பிறகு மிகப்பெரும் ஒரு ஆக்‌ஷன் படத்தில் அஜித் நடித்து வருகின்றார்.


இதில் மேலும் படிக்கவும் :