1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 21 ஜூலை 2016 (11:01 IST)

கமல் ஜோடியுடன் மீண்டும் கதாநாயகனாகும் விவேக்

கமல் ஜோடியுடன் மீண்டும் கதாநாயகனாகும் விவேக்

நடிகர் விவேக் மீண்டும் கதாநாயகனாகிறார். அவருக்கு ஜோடியாக கமாலினி முகர்ஜியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.


 
 
வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் ஜோடியாக அறிமுகமானவர் கமாலினி முகர்ஜி. முதல் படத்தில் கிடைத்த டேக்ஆஃபை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. கடைசியாக இறைவி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். தற்போது விவேக் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
விவேக் நாயகனாக நடிக்கும் படங்கள் அறிவிப்புடனே நின்று போகும் அல்லது படம் தயாராகியும் வெளியாகாது. 
 
இந்த ராசியை மீறி பாலக்காட்டு மாதவன் வெளியானது. ஆனால், படம் ப்ளாப். இந்நிலையில் மீண்டும் நாயகனாக நடிக்கிறார். படத்துக்கு துப்பறியும் சங்கர் என்று பெயர் வைத்துள்ளனர். இதில்தான் அவருக்கு ஜோடியாக கமாலினி முகர்ஜி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்