மாஸ்டர் பட தயாரிப்பாளர் படத்தில் விஜய் மகன் நடிக்கிறாரா ?
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் சமீபத்தில் இணையதளத்தில் தன் நண்பர்களுடன் இருக்கும் போட்டோவால் வைரல் ஆனார்.
இந்நிலையில், விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரித்துள்ள நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்கும் படத்தை பிரிட்டோ தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தயாரிப்பாளர் பிரிட்டோ இந்தச் செய்தியை மறுத்துள்ளார்,. மேலும் தான் இதுகுறித்து விஜய்யிடம் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.