1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (17:50 IST)

கமல் – ரஜினி சந்திப்பு நடைபெறுமா?

ஒரே வளாகத்துக்குள் இருந்தாலும், அரசியல் காரணமாக ரஜினி – கமல் சந்திப்பு நடைபெறாமல் தவிர்க்கப்படுவதாகத் தெரிகிறது.


 

 
ஒட்டுமொத்த தமிழ்நாடே விவாதித்துக் கொண்டிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியின் செட், சென்னைக்கு அருகிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
 
இருவரும் ஒரே கேட்டுக்குள் இருந்தாலும், ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள விரும்பவில்லை என்கிறார்கள். காரணம், தமிழக அரசியலின் சூழ்நிலை அப்படி. இந்த நேரத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டால், அதைப்பற்றி ஏகப்பட்ட அரசியல் காரணங்கள் விவாதிக்கப்படும் என்பதால், நேரில் சந்திப்பதை இருவருமே தவிர்க்கிறார்கள் என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்.