செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (15:52 IST)

காடன் படம் ரிலீஸாகுமா? அடுத்தடுத்து கிளம்பும் பிரச்சனைகள்!

காடன் படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸாக உள்ள நிலையில் கடன் பிரச்சனைகளால் ரிலீஸில் பாதிப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது.

தமிழ் திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் முதன்முறையாக ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் இயக்கும் திரைப்படம் காடன். தமிழில் காடன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் இந்தியில் “ஹாத்தி மெரெ சாத்தி” தெலுங்கில் “ஆரண்யா” என்ற பெயர்களில் வெளியாகிறது. மூன்று மொழிகளிலும் ராணா டகுபதி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு வெர்சன்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இந்த படம் மூன்று மொழிகளிலும் மார்ச் 26 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்போது சில கடன் பிரச்சனைகள் எழுந்துள்ளதாம். இந்த படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் மதுரை அன்புசெழியனிடம் வாங்கிய கடனை கேட்டு அவரும், தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம் தயாரித்த உத்தம வில்லன் படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களும் சேர்ந்து பிரச்சனைகளைக் கிளப்பியுள்ளனராம். இதனால் இப்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.