வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (08:27 IST)

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாமல் ஆயுதபூஜைக்கு ரிலீஸ் ஆகும் விஜய்யின் லியோ – பின்னணி இதுதானா?

விஜய் நடிக்கும் லியோ படம் ஆயுத பூஜை பண்டிகை நாட்களைக் குறிவைத்து ரிலீஸ் ஆக உள்ளது.

நேற்று இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆனது. இந்த படத்திற்கு ’லியோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இரண்டு நிமிடங்களுக்கும் மேலான இந்த படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என இந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆயுத பூஜை பண்டிகை நாட்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. தீபாவளிக்கு கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் போட்டிக்கு வரலாம் என சொல்லப்படுகிறது. மேலும் பூஜை விடுமுறை நாட்களில் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை என்பதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.