1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : வியாழன், 29 ஜூன் 2017 (12:16 IST)

ரஜினி அமெரிக்கா சென்றது இதற்காகத்தான்...

நடிகர் ரஜினிகாந்த் திடீரென ஏன் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


 

 
ரஜினிகாந்த் என்ன செய்தாலும் அது செய்தி ஆக்கப்படுகிறது. அவர் என்ன பேசினாலும் அது அரசியல் ஆக்கப்படுகிறது. ரஜினி நேற்று இரவு அமெரிக்கா சென்றார். எனவே, அவர் இதற்காகத்தான் சென்றார்.. அதற்காகத்தான் சென்றார் என செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. 
 
சிலர், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்தார் ரஜினி. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது அவர் அங்கு சென்றுள்ளார் என கூறுகின்றனர். ஆனால், அது உண்மையல்ல என ரஜினி தரப்பு மறுத்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக 2.0 மற்றும் காலா ஆகிய படங்களின் படப்பிடிப்பில் தொடர்ந்து அவர் கலந்து கொண்டதால் தன்னுடைய உடல் நிலையை பரிசோதிக்க அவர் முடிவெடுத்திருக்கலாம். மேலும், 2.0 படத்தின் புரோமொஷன் நிகழ்ச்சிகளில் ஒன்றான 100 ராட்சத பலூன்களை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பறக்கவிடும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள அவர் சென்றிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.