இளையராஜா 'பயோபிக் 'படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவரது வாழ்க்கைப் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை மும்பையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் தயாரிக்கிறது. இளையராஜாவாக தனுஷ் நடிக்க, இளையராஜா இசையில், அருண்மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி பேசுபொருளானது.
இந்த நிலையில், இப்படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை எழுதுவதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில், ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தனுஷின் 50வது படமான ராயன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
எனவே இளையராஜா பயோபிக் படத்தை தனுஷ்தான் உண்மையில் இயக்கவுள்ளார் எனவும், இப்படத்திற்கு அருண்மாதேஸ்வரை படம் இயக்கும்போது உடன் வைத்துக் கொள்ளுவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக உறுதி செய்யாத தகவல் வெளியாகிறது. இன்னொரு தரப்பினர் தனுஷே இயக்கினால், சாணிக்காகிதம், கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் எதற்கு இப்படத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இப்படத்தில் தனுஷை நடிக்க வைக்க முதலில் மும்பை தயாரிப்பு நிறுவனம் கஸ்தூரி ராஜாவை அணுகியதாகவும் அவர் ஒன்றரை மாதம் கழித்து இதுபற்றி தனுஷிடம் கூற அவர் நானே பேசி முடித்துவிட்டதாக கூறியிருக்கிறார். அதாவது, பாஸ்கி மூலம் அவர்கள் தனுஸை அணுகி ஒப்புக் கொள்ள வைத்துள்ளனர். கடைசியில் பாஸ்கி இப்படத்தில் இல்லை என்பதுதான் ஏமாற்றமாகி உள்ளது.