வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (22:38 IST)

கெளதம் மேனனுக்கு என்னாச்சு..?

கெளதம் மேனன் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து இண்டஸ்ட்ரியே குழப்பத்தில் இருக்கிறதாம். 
பிற தயாரிப்பாளர்களுக்குப் படம் எடுத்துக் கொடுக்கும்வரை நன்றாகத்தான் இருந்தார் கெளதம் மேனன். எப்போது சொந்தப் படம் எடுக்கக் கிளம்பினாரோ… அன்றுமுதல் அவருடைய நடவடிக்கையே மாறிவிட்டது என்கிறார்கள்.
 
அவருடைய படத்தில் பணிபுரிந்த அத்தனைப் பேருக்கும் சம்பளப் பாக்கி வைத்துள்ளாராம் கெளதம் மேனன். சம்பளத்தைத் தருமாறு கேட்டு நச்சரித்தால், அடுத்த  படத்தில் வாய்ப்பு தரமாட்டேன் என்று மிரட்டுகிறாராம். இதனால் வாய்ப்பாவது கிடைக்கிறதே என்று சிலர் மனதைத் தேற்றிக் கொள்கிறார்களாம்.
 
ஹாரிஸ் ஜெயராஜுக்கு சம்பளமே கொடுக்காமல் ஏமாற்றிய கதையை கோடம்பாக்கமே அறியும். தற்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சம்பளத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம். இதனால், கெளதம் மேனன் என்றாலே எல்லாரும் பதறுகின்றார்களாம்.