ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (18:49 IST)

தமிழகத்தில் மதுவை தடை செய்வோம் – பாஜக தலைவர் உறுதி

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நாளை முதல் மக்கள் தங்கள் சொந்த ஊர் சென்று ஓட்டுபோடுவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிருஸ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதவராக பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஜெயலலிதா மிகவும் துடிப்பான தைரியான பெண். அவரது வாரிசுகள்தான் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி. என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் உயர்ந்த சிந்தனைகளுடன் செயல்படவிடாமல் திமுக தடுத்துவருவதாக தெரிவித்தார். மேலு, பாஜக – அதிமுக கூட்டணி அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மதுவை முற்றிலும் தடை செய்வோம் எனத் தெரிவித்தார்.