ரஜினி அரசியலுக்கு வருவது மட்டும்தான் விவாதமா? - சீறிய கஸ்தூரி
சமீபகாலமாக நடிகை கஸ்தூரி தமிழக அரசியல் பற்றி பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
சமீபத்தில், ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து தனது அரசியல் பிரேவசம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். அதுபற்றி கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “நல்ல அரசியல் தலைவர் எதிர்பாராத சூழ்நிலையிலும் உடனே முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் ரஜினி. போர் போர் என்று ஒரே அக்கப்போராக உள்ளது” என்று பதிவிட்டார்.
இதற்கு ரஜினி ரசிகர் கொந்தளிக்கவே, நானும் ரஜினியின் ரசிகைதான் என்றார். அதன் பின்பு சமீபத்தில் தனது பிறந்தநாளன்று ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி ஒரு ஊடகத்தின் வழியே கேள்வி எழுப்பப்பட்ட போது “ரஜினியின் அரசியல் பிரவேசத்தை பற்றி மட்டுமே ஊடகங்கள் விவாதிப்பது சரியல்ல. அதை தாண்டியும் தமிழகத்தில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. அதை நல்ல ஆளுமை உள்ளவரால் நிரப்ப முடியும்” என அவர் தெரிவித்தார்.