வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (18:24 IST)

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் பாட்டு பாடிய ‘மல்லீப்பு’ மதுஸ்ரீ!

madhusri
ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் பாட்டு பாடிய ‘மல்லீப்பு’ மதுஸ்ரீ!
வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் ‘மல்லீப்பு’ என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடிய பாடகி ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
சிம்பு நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மல்லீப்பு’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த பாடலை மதுஸ்ரீ என்பவர் பாடியிருந்தார் 
 
இந்த நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்திற்காக மதுஸ்ரீ ஒரு பாடலை பாடி உள்ளதாகவும் இந்த பாடலை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை ஒலிப்பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஜெயம் ரவியின் முப்பதாவது திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்பதும் ராஜேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது விரைவில் முடிவடைய உள்ளது