1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 18 ஜூலை 2020 (15:18 IST)

பிரம்மாதம்... இணையத்தை கலக்கும் டிடியின் லாக்டவுன் நடனம்!

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.

சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை. அந்த விஷயத்தில் டிடி தன் திறமைக்கு ஏற்றவாறே பார்ப்பதற்கு அழகான முகபாவனையும் கொண்டிருப்பவர். விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி தான். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் speed Get Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது போட்டோ , வீடியோ  வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்ப்போது சுஃபியும் சுஜாதாயும் என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற "வாதிக்கலு வெள்ளரிப்ராவு" பாடலுக்கு சோஃபாவில் அமர்ந்தபடி நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு "மல்லுகளின் வீடுகளில் இந்த பாடல் தான் அதிகம் ஒலித்துக்கொண்டிருப்பதாக பதிவு செய்துள்ளார். நானும் வீட்டில் வேலையில்லாமல் இருப்பதால் இந்த பாடலை தான் அதிகம் கேட்கிறேன். இந்த சோஃபா கோரியோகிராப் செய்தது சகோதரி பிரியதர்ஷினி தான்" என கூறி பதிவிட்டுள்ளார். அமர்ந்தபடியே ஆடும் டிடியின் எக்ஸ்பிரசன்ஸ் அனைவரையும் ஈர்த்து வருகிறது.