திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 25 மார்ச் 2021 (15:34 IST)

ஆனால், அதுல ஒண்ணுமே இல்லையே... ஒர்க் அவுட் செய்து கலாய் வாங்கிய அஞ்சனா!

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ்,கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
 
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் deadlift தூக்கி கடினப்பட்டு ஒர்க் அவுட் செய்யும் அஞ்சனாவை பார்த்த நெட்டிசன்ஸ் " ஆனால், அதுல ஒண்ணுமே இல்லையே... எதுக்கு இப்படி க்ஷட்டப்படும் என அவரது ஒல்லி உடலுக்கு இப்படிப்பட்ட ஒர்க் அவுட் அவசியமா என கிண்டல் அடித்து கமெண்ட் செய்துள்ளனர்.