திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (16:56 IST)

விஷ்ணு விஷால்- அமலாபாலை இணைக்கும் மின்மிணி!!

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `மாவீரன் கிட்டு'. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.




 
 
தற்போது விஷ்ணு, `கதாநாயகன்', `சின்ட்ரல்லா', `பொன் ஒன்று கண்டேன்', `சிலுக்குவார்பட்டி சிங்கம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், `முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் விரைவில் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் முதல் முறையாக நடிக்கவிருக்கிறார். 
 
இப்படத்திற்கு `மின்மிணி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது.