செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 மே 2024 (17:05 IST)

அண்ணாமலை பயோபிக்கில் நடிக்கிறாரா விஷால்? தீயாய் பரவும் தகவல்!

ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகியுள்ள படம் ‘ரத்னம்’. இந்த படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களையும் மோசமான வசூலையும் பெற்றுள்ளது. இதனால் விஷால் கேரியரில் மிக மோசமான வசூல் செய்த படமாக ரத்னம் அமைந்துள்ளது.

இந்நிலையில் விஷால் அடுத்து துப்பறிவாளன் 2 மற்றும் முத்தையா இயக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு விஷால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

சமீபகாலமாக விஷால் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளைப் பேசி வருகிறார். அதனால் பாஜகவினரான அண்ணாமலை பயோபிக்கில் அவர் நடிப்பது ஆச்சர்யமில்லை.