சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவிக்குப் பதில் இந்த ஹீரோவா?
சங்கமித்ரா படத்தில் இருந்து ஜெயம் ரவி வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஜெயம்ரவி, ஆர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படம் சங்கமித்ரா. இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது என்பதும் 2018ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் இந்த படம் கால தாமதமாகி வருவதை அடுத்து அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை லைகாவோடு இணைந்து ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் தயாரிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஜெயம் ரவி வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஜெயம் ரவிக்குப் பதிலாக இப்போது விஷாலை அந்த வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.