திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2017 (20:18 IST)

தே.ப.பா.க மயில்சாமியின் புது கட்சி?? வைரலாகும் போஸ்டர்!!

நடிகர்கள் அரசியலில் வருவது பொதுவானதுதான். அந்த வகையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோர் தங்களுக்கென அரசியலில் தனி முத்திரை பதித்துள்ளனர். 
 
அந்த வகையில், அடுத்து ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. சமீபத்தில் ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார்.
 
கடந்த சில மாதங்களாக அர்சியல் குறித்த தனது கருத்துக்களை தைரியமாக முன்வைத்து வருகிறார் நடிகர் மயில்சாமி. இந்நிலையில், மயில்சாமியின் போஸ்டர் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 
 
அதில், தே.ப.பா.க என கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கம் தேசிய பணக்காரர்கள் பாதுகாப்பு கழகமாம். இந்த போஸ்டர் ஏதேனும் படத்திற்காக வெளியிடப்பட்டுள்ளதா என தெரியவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகளாம்.