1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 14 மே 2017 (22:41 IST)

தல டிரெண்டிங் அரசன்னா, தல மகள் டிரெண்டிங் இளவரசியாம்!

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படத்தின் டீசர் கடந்த 11ஆம் தேதி வெளிவந்து இணையதளங்களில் புதிய சுனாமியை கிளப்பிய நிலையில் மிகக்குறைந்த மணி நேரங்களில் 1 கோடி பார்வையாளர்கள் பெற்ற வீடியோ என்ற உலக சாதனையை ஏற்படுத்தியது. கடந்த மூன்று நாட்களாக அஜித்தின் 'விவேகம்' டுவிட்டரில் உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



 


இந்த நிலையில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதற்கேற்ப, தல மட்டுமின்றி தல அஜித்தின் மகளும் தற்போது டுவிட்டர் டிரெண்டிங்கில் உள்ளார். அவர் படித்து வரும் பள்ளியில் ஆண்டுவிழா இன்று நடைபெற்ற நிலையில் அஜித் மகள் அனோஷ்கா, கரகாட்டம் ஆடினார். இந்த புகைப்படம் தற்போது சென்னை, தமிழ்நாடு மற்றும் இந்தியா டிரெண்டிங்கில் உள்ளது.

எனவே தல டிரெண்டிங் அரசன் என்றும், அவரது மகள் டிரெண்டிங் இளவரசி என்றும் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அஜித் மகள் அனோஷ்காவின் கரகாட்ட புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகிறது.