1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2017 (06:00 IST)

விமல்-வரலட்சுமி ஜோடி சேரும் படத்திற்கு அஜித் பட டைட்டில்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். இவரது நடிப்பில் உருவான 'விக்ரம்வேதா' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் 'அம்மாயி', 'நிபுணன்', மற்றும் அஜய் வாசுதேவன் இயக்கும் மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்



 


இந்த நிலையில் விமலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படம் என்றும் ஆரம்பம் முதல் கடைசி வரை விமல், வரலட்சுமி காமெடி காட்சிகள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு 'காதல் மன்னன்' என்ற அஜித் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுந்தர் சி உதவியாளர் இயக்கவுள்ள இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெறவுள்ளது. தென்காசி, குற்றாலம் மற்றும் செங்கோட்டை, கேரள எல்லைகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. வரும் ஜூலை 10ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.