செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (15:05 IST)

கபடி கற்கும் விக்ராந்த்

‘வெண்ணிலா கபடிக்குழு 2’ படத்தில் நடிப்பதற்காக கபடி கற்று வருகிறார் விக்ராந்த்.



 


சுசீந்திரன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘வெண்ணிலா கபடிக்குழு’. விஷ்ணு விஷால் ஹீரோவாக அறிமுகமான இந்தப் படத்தில், சரண்யா மோகன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்தில்தான் சூரிக்கு பரோட்டா காமெடி மூலம் ‘பரோட்டா சூரி’ என்ற பெயர் வந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. சுசீந்திரனுக்குப் பதில் செல்வசேகரன் இயக்குகிறார். முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் இறந்துவிடுவார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகிறது. எனவே, விக்ராந்த் ஹீரோவாக நடிக்க, அதில் நடித்த மற்ற நடிகர்கள் அப்படியே நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக தீவிரமாக கபடி கற்று வருகிறார் விக்ராந்த்.