1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2017 (22:45 IST)

விக்ரம் வேதா ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.



 
 
இந்த நிலையில் சற்று முன் கிடைத்த தகவலின்படி 'விக்ரம் வேதா' திரைப்படம் வரும் வெள்ளியன்று அதாவது ஜூலை 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் விஜய்சேதுபதி, மாதவன் ஆகிய இருவருக்கும் திருப்புமுனையை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
மாதவன், விஜய்சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை புஷ்கர்-காயத்ரி இயக்கியுள்ளனர். சாம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.