25 நாட்கள் ஆகியும் கூட்டம் குறையாத ‘விக்ரம் வேதா’
ரிலீஸ் ஆகி 25 நாட்கள் ஆகியும், ‘விக்ரம் வேதா’ படத்துக்கான கூட்டம் குறையவில்லை என்கிறார்கள்.
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் ஜூலை 21ஆம் தேதி ரிலீஸான படம் ‘விக்ரம் வேதா’. மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து மிரட்டியுள்ள இந்தப் படத்தில், மாதவன் போலீஸாகவும், விஜய் சேதுபதி ரவுடியாகவும் நடித்துள்ளனர். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விமர்சன ரீதியாக மட்டுமின்றி, கலெக்ஷன் ரீதியாகவும் இந்தப் படம் டாப் கியரில் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், ஜி.எஸ்.டி. பிரச்னையால் துவண்டிருந்த கோடம்பாக்கத்தை தலைநிமிரச் செய்தது இந்தப் படம். ரிலீஸாகி இன்றோடு 25 நாட்கள் ஆகியும், தமிழகம் முழுவதும் இன்னும் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.