வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (18:49 IST)

விக்ரம் பிரபுவின் அடுத்த படம் பூஜையுடன் தொடக்கம் !

தமிழ் சினிமாவில் இளம் நடிகரும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகவுள்ள புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக ரிலீசான படம் புலிக்குத்தி பாண்டியன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இப்படம் சன் தொலைக்காட்சியில் நேரடியாக ரிலீசாகனது.

இவர் அடுத்து நடிக்கவுள்ள படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில்,  தற்போது  இயக்குநர் மணிவேல் இயக்கவுள்ள பகையே காத்திரு என்ற படத்தில் விக்ரம் பிரபு நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்மிருந்தி நடிக்கவுள்ளார்.

இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார் மற்றும் வித்யா பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை சாம்.சி.எஸ் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.