1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (07:33 IST)

இந்தி தயாரிப்பாளரை மடக்கி துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்யும் கௌதம் மேனன்!

கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து நவம்பர் 24  ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை.

துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக என்டர்டைன்மென்ட்’ நிறுவனம் கடைசி நேரத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரிலீஸ் ஆகாது என அறிவித்தது. இதையடுத்து டிசம்பர் 1 ஆம் தேதி திட்டமிட அந்த தேதியிலும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த படம் சம்மந்தமாக நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வழக்கில் படத்தை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளாராம். அதனால் துருவ நட்சத்திரம் படத்தினைக் காண ஆவலாக இருக்கும் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடும் கோல்ட் மைன் பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிபர் மனிஷிடம் அவருக்கு இரண்டு படங்கள் இயக்கித் தர ஒப்பந்தம் செய்து அவரிடம் இருந்து பணம் பெற்று துருவ நட்சத்திரம் படத்தின் கடனை அடைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.