திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (06:06 IST)

10 வருடங்களுக்கு பின் விஜய்சேதுபதி படத்தில் ரீஎண்ட்ரி ஆகும் ஜனகராஜ்

ரஜினி, கமல்  படங்கள் உள்பட பல்வேறு ஹீரோக்கள் படங்களில் காமெடி நடிகராக கலக்கியவர் ஜனகராஜ். இவருடைய பாடி லாங்க்வேஜ் மற்றும் டயலாக் டெலிவரிதான் இவருடைய சிறப்பு. 



 
 
கடந்த 1980 முதல் 2000ஆம் ஆண்டு வரை பிசியாக நடித்து கொண்டிருந்த ஜனகராஜ், அதன் பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர் படங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி-த்ரிஷா நடிக்கும் '96' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்
 
நேற்று விஜய்சேதுபதி, ஜனகராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. பத்து வருடங்கள் கேப் விட்ட போதிலும் இயக்குனர் கூறியதை கவனமாக கேட்டு ஒரே டேக்கில் ஓகே செய்த ஜனகராஜை படக்குழுவினர் பாராட்டினர். இந்த படத்தை அடுத்து அவருக்கு மேலும் படவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.