வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (20:51 IST)

விஜய் தங்க செயின் பரிசு கொடுத்தது 'பைரவா' வெற்றிக்கு இல்லையாம்?

பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், 'சமீபத்தில் வெளிவந்த 'கபாலி', 'பைரவா' மற்றும் 'சி 3' உள்பட எந்த படமும் விநியோகிஸ்தர்களுக்கு லாபத்தை தரவில்லை என்றும் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்கள் தயாரிப்பாளர்களால் பொய்யாக பரப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.




இந்நிலையில் 'பைரவா' சக்ஸஸ் மீட் என்று வைத்து அதில் விஜய், அந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தங்க செயின் கொடுத்தது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விஜய்யை கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து விஜய்யின் பி.ஆர்.ஓ தற்போது விளக்கம் அளித்துள்ளார்

'பைரவா' படக்குழுவினர்களுக்கு விஜய் தங்க செயின் பரிசு கொடுத்தது 'பைரவா' வெற்றி என்பதற்காக அல்ல. அவருடன் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு கொடுத்ததற்கான நன்றிதான் அந்த பரிசு என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விளக்கத்தை ஏற்று விஜய்யை கலாய்த்து வரும் அஜித் ரசிகர்கள் நிறுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்