செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 29 அக்டோபர் 2014 (14:56 IST)

விஜய்யின் அரைமணிநேர பிரஸ்மீட்

கத்தி பரவலான வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக விஜய் சார்பில் பிரஸ்மீட் ஏற்பாடு செய்யப்பட்டது.
 
வேளச்சேரியிலுள்ள நட்சத்திர விடுதியில் இந்த சந்திப்பு நடந்தது. பொதுவாக இதுபோன்ற சந்திப்புகளில் பிரஸ்ஸுக்கு விருந்தும் பணமும் தந்து சைலண்டாக வெளியேறுவது அஜீத்தின் வழக்கம். ஆனால் விஜய் படம் குறித்தும், வெற்றி குறித்தும் நாலு வார்த்தையாவது பேசுவார். ஆனால் இந்தமுறை பத்திரிகையாளர்களை வரவேற்றதோடு டாட்டா காட்டி கிளம்பிவிட்டார்.

விஜய்யின் இந்த மாற்றத்தை ஓரளவு எதிர்பார்த்ததுதான். கத்தியில் மீடியாவுக்கு எதிராக விஜய் மூலமாக முருகதாஸ் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார். மக்கள் பிரச்சனைக்கு மீடியாக்கள் குரல் தருவதில்லை என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டு. 
 
அதனைத் தொடர்ந்து, படத்தில் வரும் தண்ணீர் பிரச்சனை, மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் ஆகியவற்றையெல்லாம் முருகதாஸும், விஜய்யும் மீடியாவைப் பார்த்து தெரிந்து கொள்ளாமல் நேரடியாக சம்பவ இடத்துக்குப் போயா தெரிந்து கொண்டார்கள் என விமர்சனம் எழுந்தது. இதே கேள்விகள் பிரஸ்மீட்டில் கேட்கப்படலாம் என்பதாலேயே விஜய் பத்திரிகையாளர்களை வரவேற்றதுடன் கிளம்பிவிட்டார் என கூறப்படுகிறது.