திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 ஏப்ரல் 2022 (12:50 IST)

சிவகுமார் வீட்டுக்குப் போனா டீ, காபி கிடைக்காது… மலரும் நினைவுகளைப் பகிர்ந்த விஜயகுமார்!

அருண் விஜய் குடும்பத்தின் மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்துள்ள ஓ மை டாக் திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக அமேசான் நிறுவனத்தோடு 4 படங்களை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி டிசம்பர் மாதம் அருண் விஜய் மற்றும் அவரின் மகன் ஆர்ணவ் மற்றும் அருண் விஜய்யின் தந்தை விஜயகுமார் ஆகிய மூவரும் இணைந்திருக்கும் படமான ஓ மை டாக் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது.

இதையடுத்து படத்தின் கலைஞர்கள் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய விஜயகுமார், நடிகர் சிவகுமார் உடனான தன்னுடைய பழைய கால நட்பு குறித்து சிலாகித்து பேசினார். அதில் “சிவகுமாரும் நானும் 55 ஆண்டுகாலமாக நண்பர்களாக இருக்கிறோம். நல்ல முன்னுதாரணமான குடும்பம் சிவக்குமாரின் குடும்பம். அவர் காபி, டீ அருந்துவதில்லை அந்த காலத்தில் அவருடைய வீட்டிற்கு சென்றால்.., ஒரு பானை நிறைய எலுமிச்சை பழ ஜூஸ் இருக்கும். வருகை தரும் விருந்தினர்களுக்கு ஜூஸ் தான் தருவார்.” என ஜாலியாக பேசியுள்ளார்.