வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (20:18 IST)

நயன்தாரா படத்தில் முக்கிய வேடம் ஏற்கும் விஜய்வசந்த்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும்  நடிகை நயன்தாரா தற்போது 'டோரா', 'அறம்', 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம்', மற்றும் 'வேலைக்காரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்



இவற்றில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்து வருகிறார்

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது விஜய்வசந்த் இணைந்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான 'அச்சமின்றி' படத்தில் ஹீரோவாக நடித்த நிலையில் தற்போது இந்த படத்தில் அவர் சிவகார்த்திகேயனின் நண்பனாக நடிக்கின்றார். விஜய் வசந்த்துக்கு இந்த படத்தில் வெயிட்டான கேரக்டர் என்றும், இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்

மோகன் ராஜா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.