வாரிசு படத்தின் கதைக்களம் பற்றி வாய்திறந்த சரத்குமார்…. வைரல் அப்டேட்!
நடிகர் சரத்குமார் வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் தந்தையாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு அடுத்து அவருக்குதான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படம் ஒரு குடும்ப படமா என்ற கேள்விக்கு சரத்குமார் “வாரிசு ஒரு குடும்ப படம். ஆக்ஷன் படம். டிராமா படம். படத்தில் 6 பாடல்களும் உள்ளன.” எனக் கூறியுள்ளார்.