திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 ஜூலை 2018 (19:18 IST)

ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே சாட்டிலைட் உரிமை விற்பனையான 'தமிழ்ப்படம் 2'

சிவா நடிப்பில் இயக்குனர் சி.எஸ்,அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம் 2' இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் வந்து கொண்டிருந்தாலும் முதல் நாளில் பெரிய ஸ்டார் படங்களுக்கு இணையான வசூலை தந்துள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் அபார வசூலை பார்த்த சாட்டிலைட் தொலைக்காட்சிகள் இந்த படத்தின் உரிமையை பெற முயற்சித்தன. கடும் போட்டிக்கு பின்னர் ஒரு பெரிய தொகைக்கு விஜய் டிவி, இந்த படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளது. ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே சாட்டிலைட் உரிமை விற்பனையானதை கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் நாளை கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்'' படம் ரிலீஸ் ஆனபோதிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கும் 'தமிழ்ப்படம் 2' படத்தின் பெரும்பாலான டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.